பெல்ஜியம் : ரயில் நிலையத்தில் பயணிகள் மீது கத்தியால் தாக்குதல்

by Editor
0 comment

பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 30 வயதுடைய நபர் பெல்ஜியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கான எந்த பின்புலமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

மெட்ரோவிற்குள் தாக்குதல் நடத்திய நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்திவிட்டு பயணிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

“நான் மெட்ரோ வண்டியில் ஏறினேன், கதவுகள் மூடப்பட்ட பின்னர் ஒரு கணம் மக்கள் கூட்டம் கூச்சலிட்டபடி வெளியே வருவதை நான் கண்டேன். கத்தியுடன் ஒரு நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தினார், பின்னர் அவர் எங்களைத் தாக்க முயற்சித்தார்’’ என சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணொருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும்,
“அந்த நபர் வெளியே போ, வெளியே போ, ஓடு என்று கத்தினார், நான் அவரை பார்க்காமல் சென்றேன். மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். நானும் என் குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடினேன்” என்றார்.

அவசர சேவையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக செயலாற்றியதை பிரசல்சின் நகரத்தலைவர் பிலிப் குலோஸ் பாராட்டியுள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech