29 வயது பெண் அவருடைய துணைவரால் கடந்த சனிக்கிழமை Limoges-யில் (Haute-Vienne) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தலையில் குண்டுடன் அவருடைய வீட்டில் இறந்து கிடந்த அவர் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணையில், கைது செய்யப்பட்ட அவருடைய துணைவர் சம்பவத்தன்று கைத்துப்பாக்கியை கையாண்டதாகவும், செயலிழந்த துப்பாக்கி தற்செயலாக செயல்பட்டு சுட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை அரசுத் தரப்பு ஏற்க மறுத்துள்ளது.
சனிக்கிழமை மாலை இரவு 8.30 மணியளவில் காவல்துறையினரும் அவசர சேவை பிரிவினரும் வீட்டிற்கு விரைந்தபோது கொல்லப்பட்டவரின் உடல் சோபாவுக்கு அருகில் கிடந்துள்ளது. அவரை உயிர்ப்பிக்க எதுவும் செய்ய முடியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஏற்கனவே தன் முன்னாள் மனைவிகளை கொடுமைப்படுத்திய வன்முறைச் செயல்களுக்காக காவல்துறையினருக்கு அறிமுகமானவர். துப்பாக்கியை வைத்திருக்கவும் அவருக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.