ரஷ்யாவுடனான போரில் பிரான்ஸ் பங்கேற்காது என்று பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.
தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போரில் பங்கேற்காது என்று பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீரங்கிகளை வழங்கும் நாடுகள் தங்களுடன் நேரடியாக மோதுவதாகத் தான் கருத்தில் கொள்ளப்படும் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை அனுப்பும் மேற்கத்திய நாடுகளின் முடிவைத் தொடர்ந்து, பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்பி ரஷ்யாவுடனான போரில் பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார்.