கடை உரிமையாளரை தாக்கியதுடன், கைது செய்ய வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர்களுடன் சண்டையிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாரிசின் 15 ஆவது மாவட்டத்தில் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (BAC) கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மூவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பெரியவர் மற்ற இரண்டு பேரும் 18 வயதுக்கு கீழுடையவர்கள்.
சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னர் சந்தேக நபர்கள் மூவரையும் கண்டறிந்த காவல் துறையினர் அவர்களை பின்தொடர்ந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு rue de la Convention-யில் உள்ள சிகையலங்கார நிலையத்தின் மேலாளரை மூன்று பேரும் தாக்கியுள்ளனர். கடையை மூடும் தருவாயில் இருந்த உரிமையாளர் கடைக்குள் தள்ளப்பட்டு மூவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கடை உரிமையாளரின் கழுத்தைப் பிடித்தபோது, அவரது கூட்டாளிகளில் ஒருவர் அவரது கைக்கடிகாரத்தைப் பறித்துள்ளார். காவல் துறையினர் மறைந்திருப்பதை அறிந்து அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது காவல் துறையினர் தலையிட்டு குற்றவாளிகள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இதை அருகிலிருந்த குடியிருப்புவாசி ஒருவர் தன்னுடைய ஃபோனில் பதிவு செய்துள்ளார்.