21 வயதான இளைஞர் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுத்தெருவில் வைத்து கத்தியால் குத்தி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர்.
இந்த வழக்கில் ஐந்து பேர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 1:30 மணியளவில் இருபது பேர் கொண்ட கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான ஐந்து நபர்கள் இருந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்களை பிடித்த விசாரித்தபோது அவர்கள் இளைஞர் ஒருவரை தாக்கி, தீ வைத்து எரிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. அதிலொருவர் எளிதில் தீ பற்றக்கூடிய திரவம் ஒன்றினை பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தெளித்து, பட்டாசை கொளுத்தி போட்டு அவரை எரிக்க முயன்றுள்ளார். இதில் காயமடைந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
18 முதல் 21 வயதுடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை முயற்சியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.