பிரான்சில் Carrefour-ல் விற்பனை செய்யப்பட்ட பாஸ்மதி அரிசியில் பூச்சிகள்

by Special Correspondent
0 comment

கர்ஃபூரில் (Carrefour) விற்கப்பட்ட பாஸ்மதி அரிசியில் புழு, பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ile-de-France, Auvergne-Rhône-Alpes, மற்றும் Bourgogne-Branch-Comte போன்ற இடங்களில் விற்கப்பட்ட carrefour ஒரு கிலோ அரிசி பாக்கெட்டுகளில் பூச்சிகள், புழுக்கள் தென்பட்டதால் விற்கப்பட்ட பாக்கெட்டுகளை கர்ஃபூர் பேரங்காடி திரும்ப பெற்று வருவதாக நுகர்வோர் பயன்பாடு விழிப்புணர்வு வலைத்தளமான Rappel Conso தெரிவித்துள்ளது.

பூச்சித்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிப்பு ஏற்பட்டு அரிசி வீணாகியுள்ளதால் கர்ஃபூரின் பாஸ்மதி அரிசி பாக்கெட்டுகளை பயன்படுத்தவேண்டாமென அத்தளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அரிசி பாக்கெட்டுகளை பயன்படுத்தாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

நுகர்வோரிடம் ஆகஸ்ட் 28 முதல் நவம்பர் 30, 2023 வரை (வரிசை எண்: 322822) விற்பனை செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி பாக்கெட்டுகள் இருந்தால் (GTIN – 3560070837984) அதனை அருகில் உள்ள Carrefour அங்காடிகளில் திருப்பி கொடுக்குமாறு Rappel Conso வலைதளம் அறிவுறுத்தியுள்ளது. 

Carrefour தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருப்பின் உடனே நுகர்வோர் சேவை மையத்தை தொடர்புகொள்ளுமாறும் கூறியுள்ளது. 

வாங்குவதற்காக செலவிட்ட தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பொருட்களை திரும்ப வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ள ஜனவரி 30, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள 08.05.90.80.70 எனும் எண்ணை தொடர்புகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech