மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியில் தீ விபத்து : 11 பேர் பலி

by Editor
0 comment

மனநலம் மற்றும் உடல் நலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு விடுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி மற்றும் சுவிஸ் எல்லைக்கு அருகிலுள்ள Wintzenheim (Haut-Rhin) நகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுமுறை இல்லம் செயல்பட்டு வந்தது.

பண்ணை வீடாக இருந்த இடம் விடுமுறை இல்லமாக சீரமைக்கப்பட்டு சமூக நல அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த் கட்டிடத்தின் தரைத்தளத்தில் திடீரென தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். திடீர் தீயினால்  அக்கட்டிடத்தின் பெரும்பகுதி தீக்கிரையானது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அங்கிருந்து மீட்கப்பட்டவர்களில் சிலரை காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர்களில் பதினொரு பேர் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் 27 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள் ஆவர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech