பிரான்சின் லியோன் நகரத்திலுள்ள இன்டர்போல் அலுவலகத்தில் புகுந்து பத்து கணினிகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடும் பாதுகாப்புகளை மீறி இன்டர்போல் அலுவலகத்திற்குள் புகுந்த அந்நபர், கடந்த மாதம் பத்து கணினிகள் வரை திருடிக்கொண்டு தப்பியுள்ளார்.
இரண்டு வார தேடுதலுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதவினை உடைத்து அலுவலகத்துக்குள் புகுந்த அந்நபர் கணினிகளை திருடி விட்டு அங்கியிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.
இருப்பினும் கண்காணிப்பு கேமராக்களின் கண்களில் அவர் சிக்கியுள்ளார்.
கணினிகளை திருடிய நபர் குறித்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து தேடிய போது திருட்டில் ஈடுபட்ட அந்நபர் பிடிபட்டுள்ளார். அவர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு எட்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.