கடந்த செவ்வாயன்று ஒரு மாணவர் விடுதி உட்பட இரண்டு குடியிருப்புகளிலிருந்து 5.2 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜனவரி 4 ஆம் தேதி, காவல் துறையின் ஒரு பிரிவான பிராந்திய தொடர்பு படை (பி.டி.சி) பிக்பாக்கெட்காரர்களுக்கு எதிராக வழக்கம் போல காவல் துறை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர் காவல்கண்காணிப்பின் போது ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் அடையாளர் கண்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்தபோது அவர்கள் இருவரும் போதைப்பொருளை விற்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து முதலில் ஆறு கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதன் பின் மோப்ப நாய் துணையுடன் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்றவரின் வீட்டிலிருந்து இரண்டு கிலோ ஹெராயினும், மாணவர்கள் வீட்டிலிருந்து ரொட்டி போன்று வைக்கப்பட்டிருந்த 3.2 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டன. கூடுதலாக 130 கிராம் ஹெராயினும் அந்த விடுதியிலிருந்து கைப்பற்றப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 5 இலட்சம் யூரோக்களாகும்.
Saint-Denis புலனாய்வு துறையின் வரலாற்றில் இந்த அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.