மேரி மாதா சிலையை அகற்ற பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு

by Editor
0 comment

பிரான்சில் La Flotte-en-Ré எனும் சிறிய நகரத்திலிருக்கும் கன்னி மரியாளின் சிலையை அகற்ற பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரியாளின் சிலை மதமும் அரசும் ஒன்றல்ல எனும் கோட்பாட்டை மீறுகிறது என்று கூறியுள்ளது.

இந்த சிலை பிரான்சின் அட்லாண்டிக் கடற்பகுதியிலுள்ள, சுற்றுலாவுக்கு பெயர்போன தீவான இல்-தெ-ரேவில் (Ile-de-Re) 2,800 மக்கள் தொகைக் கொண்ட ஒரு சிறிய நகராட்சியான லா ஃப்ளோட்டில் (La Flotte) அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு தந்தையும் மகனும் போரில் இருந்து உயிருடன் திரும்பியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு உள்ளூர் குடும்பத்தினரால் இந்த சிலை நிறுவப்பட்டது.

ஆரம்ப காலத்தில் மேரி மாதாவின் சிலை ஒரு தனியார் தோட்டத்தில் இருந்தது, பின்னாட்களில் அந்த குடும்பம் அதை நகரத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இது 1983 ஆம் ஆண்டில் தற்போது இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஒரு கார் மோதியதால் அந்த சிலை சேதமடைந்தது. எனவே உள்ளூர் நிர்வாகம் அதை சீரமைத்து பழைய இடத்திலேயே பெரிய பீடத்தை அமைத்து அதில் சிலையை நிறுவியது.

Libre Pensee 17 எனும் மதச்சார்பின்மை பாதுகாப்பு அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தது. 1905 இயற்றப்பட்ட அந்த சட்டம் மத நினைவுச்சின்னங்களை பொது இடங்களில் நிறுவ தடை செய்கிறது.

முதலில் Poitiers நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு மேல்முறையீட்டிற்காக பொர்தோ (Bordeaux) மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் La Flotte நகர நிர்வாகம் மேரி மாதா சிலையை அகற்ற கூறி உத்தரவிட்டது.

நகரத்தலைவர் ஜீன்-பால் ஹெராடோ (Jean-Paul Heraudeau) இந்த சர்ச்சை கேலிக்கூத்தானது என்று தெரிவித்துள்ளார். ‘இது இந்நகரத்தின் ‘வரலாற்று பாரம்பரியத்தின்’ ஒரு அங்கமாகும். இது மதம் சார்ந்த சிலை என்பதை விட ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக கருதப்பட வேண்டும் என்றும்’ தெரிவித்தார்.

ஆனால், தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘நகராட்சி நிர்வாகம் எந்தவகை உள்நோக்கத்துடனும் குறிப்பிட்ட மதத்தை முன்னிலைப்படுத்த இதை செய்யவில்லை என்பதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், கன்னி மரியாள் கிறிஸ்தவ மதத்தில் மிக முக்கியமான நபர் என்பதால் இதற்கு ‘உள்ளார்ந்த மதத் தன்மையை’ அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech