158
மோந்த்ரேயில் (சேன் சான் தெனி) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டில் இருந்த ஒரு பெண் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காவல் துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இரவு பதினொரு மணியளவில் Rue Carnotஇல் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் ஐம்பது வயதான அந்த பெண்மணி கதவை திறக்க அதன் அருகே சென்றபோது சந்தேக நபர் கதவின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.வயிற்றில் காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் உடனே அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.