தன்பால் ஈர்ப்பு வெறுப்புணர்வால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்கொலை : பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்

by Editor
0 comment

தன்பால் ஈர்ப்பு வெறுப்புணர்வினால் பள்ளியில் கொடுமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்பால் ஈர்ப்பு வெறுப்புணர்வு கொலைகளை பற்றிய எச்சரிக்கைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தூண்டியுள்ளது.

லூகாஸ் எனும் சிறுவன் கடந்த வார இறுதியில் கிழக்கு பிரான்சின் வோஸ்கெஸ் (Vosges) பகுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

தன்பால் ஈர்ப்பு வெறுப்புணர்வினால் பள்ளியில் கொடுமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்பால் ஈர்ப்பு வெறுப்புணர்வு கொலைகளை பற்றிய எச்சரிக்கைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தூண்டியுள்ளது.

லூகாஸ் எனும் சிறுவன் கடந்த வார இறுதியில் கிழக்கு பிரான்சின் வோஸ்கெஸ் (Vosges) பகுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். காவல்துறை விசாரணையில் அவருடைய தன்பால் ஈர்ப்பின் காரணமாக பல மாதங்களாக அவரது பள்ளியில் சக மாணவர்களால் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த சிறுவனின் குடும்பம் இன்னும் புகார் அளிக்கவில்லை. ஆனால், கோல்பே நகரில் (Town of Golbey) உள்ள லூயிஸ் அர்மாண்ட் (Armand school) பள்ளி கல்வி அமைச்சகத்திற்கு தகவலை தெரிவித்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்வேறு பிரெஞ்சு அமைச்சர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுவனின் குடும்பம் இன்னும் புகார் அளிக்கவில்லை. ஆனால், கோல்பே நகரில் உள்ள லூயிஸ் அர்மாண்ட் பள்ளி கல்வி அமைச்சகத்திற்கு தகவலை தெரிவித்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்வேறு பிரெஞ்சு அமைச்சர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech