133
பாரிசின் 20ஆவது வட்டத்திலிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சலவை இயந்திரத்திலிருந்து மூன்று வயது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை தனது கடைசி குழந்தையை காணவில்லை என குடியிருப்பு முழுக்க பெற்றோர் தேடி வந்த நிலையில், அதன் தந்தை குழந்தையின் உயிரற்ற உடலை வீட்டின் சலவை இயந்திரத்தின் உள்ளே கண்டுபிடித்துள்ளார்.
‘பார்த்த வரையில் அடி வாங்கியதற்கான தடயங்கள் எதுவும் குழந்தையின் உடலில் காணப்படவில்லை’ என காவல்துறையினர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இறந்தவர் சிறார் என்பதால் சிறார் பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.