Wednesday, April 22, 2026

Cherbourg : கரை ஒதுங்கிய கொக்கைன் போதை பொருள் அடங்கிய பைகள்

by Editor
0 comments

கடலிலிருந்து அடித்து வரப்பட்ட 30 கிலோ கொக்கைன் போதை மருந்து அடங்கிய பைகள் கரை ஒதுங்கி உள்ளன.

இதையும் சேர்த்து இதுவரை  இரண்டு டன்னிற்கும் அதிகமான கொக்கைன்  போதை மருந்து  பல்வேறு கடற்கரைகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதோடு கடற்கரைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போதை மருந்து அடங்கிய பைகள் எங்கிருந்து வந்தன என்பதன் விவரங்கள் தெரியவில்லை. ஒருவேளை கப்பலில் இருந்து தவறு கடலில்  விழுந்திருக்கலாம் அல்லது சோதனைக்கு பயந்து கடலில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 1.6 டன் கொக்கின் போதை மருந்து Camaret (Finistère) கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech