பாரிசின் 16வது வட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த இளைஞர் பாரிசின் 16 வது வட்டத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கொல்லப்பட்டுள்ளார்.
அவருடைய உறவினர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு வீட்டு வாயிலின் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் அவருடைய உடலை கண்டுள்ளனர். வீடு முழுவதும் கலைந்து இருந்தது.
கலைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். உடற்கூறாய்வுவிற்கு பிறகு அவர் எப்போது எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவரும்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.