காவல் நிலைய சுற்றுச்சுவரின் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 5.:45 மணி அளவில் 21 வயது இளைஞர் ஒருவர் ஷார்ட் கட் எனப்படும் துப்பாக்கியை கொண்டு கிளிஷி-சு-புவா காவல் நிலையத்தின் சுவரின் மீது மூன்று, நான்கு முறை சுட்டுள்ளார்.
குறிப்பாக சுற்றுச்சூழின் மீது இருந்த கண்காணிப்பு கேமராக்களை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அருகே இருக்கும் டிராம் வேயில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
ஆனாலும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த அடையாளங்களை வைத்து காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் அவர் யார் என்பதை கண்டுபிடித்தனர். அதனை வைத்து அவர் இருந்த அழைக்கி சென்ற காவல்துறையினர் அங்கிருந்து நபரை கைது செய்தனர்.
அவர் வீட்டில் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.
Hier soir tirs au fusil à pompe contre le #commissariat de Clichy-sous-Bois.Individu identifié et interpellé.Félicitations aux #policiers de la BAC et BTC Clichy-sous-Bois/ Gagny @prefpolice pour l'interpellation de l'auteur présumé, défavorablement connu des services de #Police pic.twitter.com/zM6wYuv2B9
— Jérôme JIMENEZ (@JrmeJIMENEZUNSA) March 7, 2023
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் சேதம் அடைந்துள்ளன.
கைதான நபர் ஏற்கனவே ஆயுத முனையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பகுதி காவல் நிலையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.