பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் என்றால் என்ன?

by Editor
0 comment

பாரீஸ் ஒப்பந்தம் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 190 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

பூமியின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

உலகில் அதிக அளவு கரியமில வாயுக்களை அமெரிக்கா, சீனாவே வெளியேற்றி வருகின்றன. அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாடு கரியமில வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக மக்கள் தொகையில் 4 சதவீதத்தை கொண்டுள்ள அந்த நாடு, கரியமிலவாயுக்களில் 35 சதவீதத்தை அந்த நாடுதான் வெளியேற்றி சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.

இதனால் நிலக்கரி நிலையங்களை மூடுதல் போன்றவற்றை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வலியுறுத்துகிறது. இந்த விதிமுறை கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணைந்தது.  இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2015ம் ஆண்டு இணைந்தது.

தகவல் : TAMIL.ASIANETNEWS.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech