அமெரிக்க நிதி நிறுவனத்திடம் பணமோசடி செய்த பிரெஞ்சு ஹேக்கர்கள் கைது

by Editor
0 comment

இரண்டு இளம் ஹேக்கர்கள் அமெரிக்க நிதி நிறுவனத்தின் வலையகத்திற்குள் பண மோசடி செய்தததால் அந்நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி மதிப்பிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Binance Cryptocurrency எனும் நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

18 மற்றும் 20 வயதுடைய அந்த இரண்டு இணைய ஊடுருவிகளிடமிருந்து 210,000 யூரோக்கள் மதிப்புடைய கிரிப்டோ கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.

ஹேக்கர்களில் ஒருவர் மீது திருட்டுத்தனமாக தரவு தளங்களுக்குள் நுழைதல், ஏமாற்றுதல் மற்றும் பணமாற்று மோசடி வழக்கும், இரண்டாவது நபர் மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு 9.5 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech