தமிழ்நாட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு !

by Editor
0 comment

தமிழகம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 29 இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் (1-ம் தேதி) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இந்தக் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் முன்பு  பரிந்துரை செய்திருந்தது. இதன்படி திருத்தப்பட்ட கட்டணம் தற்போது அமலுக்கு வந்திருக்கிறது.

சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-லிருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-லிருந்து ரூ.240, மூன்று அச்சு (ஆக்ஸில்) வாகனங்களுக்கு ரூ.225-லிருந்து ரூ.260-ஆக அதிகரித்திருக்கிறது.

கயத்தாறு அருகே சாலைப்புதூர் பகுதி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் போன்ற மோட்டார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரூபாய் 115 இல் இருந்து 120 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 175 இல் இருந்து ரூ.180 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணிக்க ரூபாய் 3,235 லிருந்து ரூ 4,030 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மினி பஸ், LGV ஒரு முறை பயணிக்க ரூபாய் 185 இல் இருந்து 195 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 280-ல் இருந்து ரூ.295 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணித்த ரூபாய் 6,200 இல் இருந்து 6,510 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

கனரக மற்றும் உயர் கனரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 745 இல் இருந்து 780 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூ.1,115 இல் இருந்து ரூ.1,170 க்கும், மாதுந்திர கட்டணமான 50 முறை பயணிக்க 24 ஆயிரத்து 790 இல் இருந்து ரூ. 26 ஆயிரத்து 45 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வாடகை வாகனங்களை இயக்குவோர், பொதுமக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech