சிறார்கள் உட்பட பதினொரு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அவர்களை அவருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். மறுப்பவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை வெளியே பரப்பிவிடுவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலமாக அறிமுகமான நபரிடம் நெருங்கி பழகி வந்த பெண்ணொருவர் தன்னுடைய நிர்வாண படங்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்நபர் அப்படங்களை வெளியே விட்டுவிடுவேன் என்று மிரட்டி அப்பெண்ணிடம் மேலும் புகைப்படங்களை கேட்டதோடு, அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அச்சமடைந்த 15 வயதேயான அப்பெண் Lyon காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்தார். இச்சம்பவம் நவம்பர் 2021-இல் நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் புகாரையடுத்து விசாரணையை துவங்கியபோது இதே போன்ற இன்னொரு சம்பவம் ஏற்கனவே Saint-Étienne (Loire) பகுதியில் நடந்தை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் குற்றத்தை மறுத்த நிலையில், அவருடைய அலைபேசியை காவல்துறையினர் சோதித்துள்ளனர். அப்போது Lyon மற்றும் Saint-Étienne பகுதிகளில் கிட்டத்தட்ட 11 பெண்களிடம் இதே பாணியில் பாலியல் வன்கொடுமையில் அவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்களில் சிலர் புகார் அளித்தையடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.