கடந்த வார இறுதியில் துலோனில் சாதாரண உடையில் இருந்த மூன்று காவலர்களை தாக்கிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் பிறந்த இரண்டு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால், அவர்கள் பல நபர்களிடையே வாக்குவாதத்தில் தலையிட்டதாக குறிப்பிடுகின்றனர்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“சந்தேக நபர்கள் தாங்கள் காவலர்களை தாக்கியதை மறுத்தாலும், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, துலோன் நகரில் ஒரு மது அருந்தகத்திலிருந்து வெளியே வந்த மூன்று காவலர்களையும் கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட கும்பலில் இருந்தவர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மூன்று காவலர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.