தூலூஸ் (Toulouse) நகரத்தில் இயங்கி வரும் சமூக அமைப்பு ஒன்றில் பணியாற்றிய முதிய பெண்மணி ஒருவர் பதினைந்தாயிரம் யூரோக்களை கையாடல் செய்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக செயல்பட்டு வரும் சமூக அமைப்பு ஒன்றில் 69 வயது பெண்மணியொருவர் அந்த அமைப்பின் தன்னார்வல பொருளாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அமைப்பின் கணக்குகளில் நிறைய சிக்கல்கள் இருப்பதை கண்டறிந்த நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியது.
அதில், அந்த அமைப்பின் தன்னார்வ பொருளாளராக பணியாற்றி வந்த 69 வயது முதிய பெண்மணியொருவர் அமைப்பின் கணக்கிலிருந்து 15 ஆயிரம் யூரோக்கள் பணத்தை அவருடைய வங்கி கணக்கிற்கும் அவருடைய பிள்ளைகள் இருவரின் கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காவல்நிலையத்தில் அமைப்பினர் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் அந்த பெண்மணி மீது வழக்கு பதிவு செய்தனர்.