இங்கிலாந்து அரசர் சார்லஸ் பிரான்சுக்கு வருகை

by Editor
0 comment

மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து அரசர் சார்லசும் அவருடைய மனைவியும் பிரான்சுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

பிரெக்சிட்பிரிவிற்கு பிறகு அரசு ரீதியான உறவுகளை மேம்படுத்த இங்கிலாந்து அரசும் பிரான்சும் முயன்று வருகின்றன.

இதனடிப்படையில், இங்கிலாந்து அரசரான மூன்றாம் சார்லசும் அவருடைய மனைவியும் அரசியுமான கமீலாவும் மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்சுக்கு வந்துள்ளனர்.

 பிற்பகல் 2 மணி அளவில் ஒர்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் கமிலாவை பிரான்சின் பிரதமர் மந்திரி எலிசபெத் போர்ன் வரவேற்றார். 

அதனையடுத்து பிரான்சின் மிக முக்கிய தேசிய சின்னங்களில் ஒன்றான ஆர்க் தெ திரையம்ப் எனுமிடத்தில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணத்திட்டம் பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech