கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பத்து மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
சர்செல்லில் (Sarcelles) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தின் அருகே குழந்தை ஒன்று படுகாயம்டைந்து விழுந்து கிடப்பதை வீடு காலி செய்வதற்காக வந்த ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அக்கட்டிடத்திலிருந்த குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் செவிலியரின் செவிலியர் வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கு அவர் இல்லாததால் உடனடியாக அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த அவசர சேவை பிரிவினர் குழந்தைக்கு முதலுதவி அளித்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தைக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 10 மாதம் அந்த குழந்தை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
செவிலியரின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை, அவர் வெளியே சென்றிருந்ததால் அவருடைய மகனின் கண்காணிப்பில் இருந்துள்ளது.
அவர் சரிவர கண்காணிக்கதால் வீட்டிலிருந்து வெளியே வந்த குழந்தை பால்கனி வழியாக தவறி கீழே விழுந்துள்ளது என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து, செவிலியரும் அவருடைய மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.