துப்பாக்கியால் சுடப்பட்டத்தில் இளைஞரின் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவன்று Cabucelle மாவட்டத்தில் மர்ம நபரொருவர் இளைஞரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டார். போதை மருந்து கடத்தல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காயமடைந்த இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கடந்த எட்டு நாட்களில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கி சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் நடைபெற்ற முந்தின நாள் இரவு 29 வயது இளைஞர் ஒருவர் ஆயுதம் தாங்கிய கும்பலால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் கலாஷ்னிகோவ் எனப்படும் நவீன துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது கொலைகாரர்களின் காராக இருக்கால் என சந்தேகித்த நிலையில், காரிலிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது இவ்வருடத்தில் நடைபெறும் ஐந்தாவது கொலைச்சம்பவமாகும்.