வாகன சோதனையின் போது காவலர்கள் மீது பாம்பை வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காரிலிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Amiens (Somme) நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக வந்த கார் ஒன்றினை நிறுத்தியபோது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
காரிலிருந்து அவரை இறங்க கூறியபோது அந்நபர் காவலர்கள் மீது பாம்பினை எடுத்து வீசியுள்ளார்.
பாம்பு தப்பிக்காமல் இருக்க காவலர்கள் உடனடியாக காரின் கதவை இறுக்க மூடியுள்ளனர்.
காவல் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 50 வயது நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று காரிலிருந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதுவொரு விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது.