சிகரெட் இரவல் தர மறுத்தவரை தொண்டையில் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் 27 வயதுடைய வாலிபரிடம் தொடர்ந்து பல முறை சிகரெட் இரவல் கேட்டபோதும் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிகரெட் கேட்ட நபர் அந்த வாலிபரை தொண்டையில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
காயமடைந்த வாலிபரை உயிருக்கு ஆபத்தான நிலையில் உலங்கு வானூர்த்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நலனில் முன்னேற்றம் ஏதுமில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Montceau-les-Mines-யிலுள்ள கடைத்தெருவில் நேற்று காலை பட்டப்பகலில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாலிபரை தாக்கிய 35 வயது நபர் ஏற்கனவே குற்றங்களில் தொடர்புடையவர். அவரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கத்தியும் கைப்பற்றப்பட்டது. அவரிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.