Cruseilles (Haute-Savoie) பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் கண்முன்னே இரண்டு பெண்கள் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண்களும் சுமார் முப்பது வயதுடையவர்கள். இறந்தவர்களில் ஒருவர் பிரெஞ்சு நாட்டவர், இன்னொருவர் சுவிசை சேர்ந்தவர். ஒருவருக்கு 35 வயது, மற்றவருக்கு 39 வயது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தன்று காலை 11:30 மணியளவில் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களின் கண்முன் இச்சம்பவம் நடந்துள்ளது. அவர்களால் தற்கொலை செய்ய முனைந்தவர்களை தடுக்க முடியவில்லை.
இறந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் எதனால் தற்கொலை செய்துகொண்டனர் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் தற்கொலை செய்துகொண்ட பாலம் தற்கொலைகளுக்கு பெயர்போனதாகும். அந்த பாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பதினைந்து தற்கொலைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் கூறியுள்ளன.