பிரான்சின் உள்துறை அமைச்சகத்தின் (SSMSI) புள்ளி விவர தரவுகளின்படி, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை நிகழ்வுகளில் 208,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்றில் இரண்டு உடல்ரீதியான வன்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் மட்டும் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட 2,08,000 பேர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர். இது 2020-ஆம் ஆண்டினைக் காட்டிலும் 21% அதிகமாகும். இவர்களில் 87% பேர் பெண்கள். இவர்களில் பாதி பேர் 25 வயதிலிருந்து 39 வயதுக்குட்பட்டவர்கள். உள்துறை அமைச்சக புள்ளி விவர தரவுகளின்படி 2020-ஆம் ஆண்டில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் மட்டுமே வழக்கு பதிந்துள்ளனர். மேலும், நடைபெறும் குடும்ப வன்முறைகளில் மூன்றில் இரண்டு உடல்ரீதியான வன்முறை எனவும், மற்றவை உளவியல் ரீதியான வன்முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் சராசரியாக 1000 பேரில் 4.9 பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், நகரப்பகுதிகளை விட கிராமப்புறங்களில் குடும்ப வன்முறை விகிதம் அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 91% சம்பவங்கள் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. 47% வழக்குகளில் துணைவரோ அல்லது முன்னாள் துணைவரோ குற்றமிழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 94 ஆயிரம் பேர் பாலியல் வன்கொடுமை அல்லது முயற்சியினால் பாதிக்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு 18 சதவிகிதமாக உயர்ந்த குடும்ப வன்முறை வழக்கு விகிதம், 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 28% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.