பத்து கிலோ கொகைன் போதைப்பொருளும், 55 ஆயிரம் யூரோ பணமும் Villeneuve-la-Garenne-யில் கைப்பற்றப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Villeneuve-la-Garenne (Hauts-de-Seine)-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து போதைப்பொருட்களும், ஆயுதங்களும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் அந்த கட்டிடம் முழுக்க பல வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது செவிலியர் ஒருவரின் வீட்டிலிருந்து பத்து கிலோ போதைப்பொருளும், 310 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு 7 இலட்சம் யூரோக்களாகும். மேலும், இரண்டு குண்டு புகா ஆடைகள் (Bullet-proof vests), நான்கு கைத்துப்பாக்கிகள் போன்றவையும் சிக்கியுள்ளன.
இதுத்தொடர்பாக இருவரை காவல்துறை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Île-de-France மாநிலத்தில் மட்டும் 192000 போதைப்பொருள் நுகர்வோர் இருப்பதாக கூறப்படுகிறது.