இரட்டை கொலை வழக்கு – தமிழர் கைது

by Editor
0 comment

பிரான்சில் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் Rennes (Ille-et-Vilaine)-வில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Saint-Ouen-l’Aumône-வில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 53 வயதான ஒரு தாயும், 21 வயதுள்ள மகளும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர். அதோடு, கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில மரபணு தடயங்களை சேகரித்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (18-01-2023) Rennes (Ille-et-Vilaine) நகரில் வைத்து 27 வயதுடைய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவருடைய வாக்குமூலத்தில் சில கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தது காவல்துறையினரின் சந்தேகத்தை வலுத்த நிலையில்., கொல்லப்பட்ட இளம்பெண்ணின் நகங்களில் அந்த இளைஞருடைய மரபணு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபருக்கும் காவல்துறையினர் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இக்கொலைக்குற்றச்சாட்டை அந்த இளைஞர் மறுத்துள்ளார்.

பணத்தை திருடியதை மறைக்க இக்கொலைச் சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறேதும் காரணமா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech