இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் மழைநீர் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு மானியம் அளிக்கவுள்ளது.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும், வாகனங்களை கழுவவும் மழை நீர் சேகரிப்பு முறை சிக்கனமான மற்றும் சூழலியல் நலன் சார்ந்த முறையாக பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.
இல் தே பிரான்சில் வசிப்பவர்களிடம் மழைநீர் சேகரிப்பு முறையை ஊக்குவிப்பதற்காக 20,000 யூரோக்கள் வரை அரசு மானியம் வழங்கவுள்ளது.
செடிகளுக்கு நீருற்றவும், பல்வேறு பயன்பாட்டுகளுக்காக மறுசுழற்சி செய்யவும், தரையின் மேல்புறத்திலோ அல்லது நிலத்தடியிலோ மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை நிறுவ மானியம் வழங்குவதற்கு இல் தே பிரான்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மானியத்தை பெற விண்ணப்பிக்கும் நபரின் வீடு அவர் வாழுகின்ற, அவருடைய முதல் வீடாக இருத்தல் வேண்டும் (résidence principale).
அதேபோல் ஒரு வீட்டிற்கு ஒரு மானியம் மட்டுமே வழங்கப்படும்.
மழை நீர் கட்டமைப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது முதல் அதை நிறுவுவது வரை தேவையான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்.
நிலத்தடியிலோ அல்லது மேற்புறத்திலோ அக்கட்டமைப்பினை நிறுவவும் அரசு உதவி செய்யும்.
மழைநீர் சேகரிப்பு நிறுவிய மூன்று மாதத்திற்குள் https://mesdemarches.iledefrance.fr/aides/#/cridfprd/ எனும் வலைத்தளத்தில் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கிட்டத்தட்ட 60 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.