நைஜர் நாட்டிலிருந்து படைகளை திரும்பப் பெறும் பிரான்ஸ்

by Editor
0 comment

ஆப்பிரிக்க நாடான நைஜரின் இராணுவ தளத்திலிருந்து தனது இராணுவ படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது பிரான்ஸ்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் (Niger) கடந்த ஜூலை அன்று ஏற்பட்ட ராணுவ புரட்சியின் எதிரொலியாக பிரான்ஸ் தன்னுடைய படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட, 200 வீரர்கள் 28 டிரக்குகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ராணுவ கவச வாகனங்களை ஓவல்லம் ராணுவ தளத்திலிருந்து திரும்ப அனுப்பியுள்ளதாக ஜூன்டா கிளர்ச்சியார்ளர்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தனது படைகளை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜரில் கிட்டதட்ட 1500 ராணுவ வீரர்கள் ராணுவ பயிற்சியிலும் மற்றும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளையும் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் குடியரசு தலைவர் இம்மானுவேல் மக்ரான் கடந்த வாரம் நைஜரிலிருந்து பிரான்ஸ் தனது படைகளை திரும்ப பெறும் என்று அறிவித்ததிலிருந்தது ஒரு மாதத்தில் இது நடைபெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இராணுவ புரட்சியின் காரணமாக நைஜரின் அதிபர் முகமது பாசிம் நீக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ் தனது தூதரை நைஜரிலிருந்து திரும்ப பெற்றுக்கொண்டது.

முன்னாள்  நைஜர் அதிபர் பசாவும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

ஆளும் கிளர்ச்சியாளர்கள் அவர் வீட்டுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை துண்டித்துள்ளனர்.

ஆளும் அரசு முன்னாள் அதிபரிடம் அவருடைய மருத்துவரை பேச அனுமதித்துள்ளது.

பாசும் பாதுகாப்பாக உள்ளதாக அவருடைய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நைஜர் முன்னாள் அதிபர் வெளிநாடுகளின் உதவிகளுடன் ஹெலிகாப்டரிலும், காரிலும் அந்நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றதாக ஜூன்டா அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை. 

அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போரிட சஹாரா பாலைவனத்திற்கு அருகிலிருக்கும் நைஜரை மிக முக்கியமான நாடாக மேற்கத்திய நாடுகள் நம்பி வந்தனர்.

பிரான்சின் இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்று தீவிரவாதம் தலை தூக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூன்டா கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின் அந்த நாட்டில் தீவிரவாதம் 40% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜர் நாட்டிலிருந்து படைகளை திரும்பப் பெறும் பிரான்ஸ்

ஆப்பிரிக்க நாடான நைஜரின் இராணுவ தளத்திலிருந்து தனது இராணுவ படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது பிரான்ஸ்

வடக்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஜூலை அன்று ஏற்பட்ட ராணுவ புரட்சியின் எதிரொலியாக பிரான்ஸ் தன்னுடைய படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட, 200 வீரர்கள் 28 டிரக்குகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ராணுவ கவச வாகனங்களை ஓவல்லம் ராணுவ தளத்திலிருந்து திரும்ப அனுப்பியுள்ளதாக ஜூன்டா கிளர்ச்சியார்ளர்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தனது படைகளை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜீரில் கிட்டதட்ட 1500 ராணுவ வீரர்கள் ராணுவ பயிற்சியிலும் மற்றும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளையும் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் குடியரசு தலைவர் இம்மானுவேல் மக்ரான் கடந்த வாரம் நைஜரிலிருந்து பிரான்ஸ் தனது படைகளை திரும்ப பெறும் என்று அறிவித்ததிலிருந்தது ஒரு மாதத்தில் இது நடைபெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இராணுவ புரட்சியின் காரணமாக நைஜரின் அதிபர் முகமது பாசிம் நீக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ் தனது தூதரை நைஜரிலிருந்து திரும்ப பெற்றுக்கொண்டது.

முன்னாள்  நைஜர் அதிபர் பசாவும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

ஆளும் கிளர்ச்சியாளர்கள் அவர் வீட்டுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை துண்டித்துள்ளனர்.

ஆளும் அரசு முன்னாள் அதிபரிடம் அவருடைய மருத்துவரை பேச அனுமதித்துள்ளது.

பாசும் பாதுகாப்பாக உள்ளதாக அவருடைய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நைஜர் முன்னாள் அதிபர் வெளிநாடுகளின் உதவிகளுடன் ஹெலிகாப்டரிலும், காரிலும் அந்நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றதாக ஜூன்டா அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை. 

அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போரிட சஹாரா பாலைவனத்திற்கு அருகிலிருக்கும் நைஜரை மிக முக்கியமான நாடாக மேற்கத்திய நாடுகள் நம்பி வந்தனர்.

பிரான்சின் இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்று தீவிரவாதம் தலை தூக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூன்டா கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின் அந்த நாட்டில் தீவிரவாதம் 40% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech