“Navigo – Subscription suspended”
இது போன்ற தலைப்புடன் மின்னஞ்சல்கள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அம்மின்னஞ்சலை திறக்காதீர்கள்.
ஒருவேளை திறந்து படித்திருந்தாலும் அதிலுள்ள எந்த இணைப்பினையும் கிளிக் செய்யாதீர்கள்.
‘இது போன்ற மின்னஞ்சல்கள் உங்களிடமிருந்து பணத்தை பறிப்பதற்காகவே இணையவெளி திருடர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்கிறது போக்குவரத்துக்கான நவிகோவை வழங்கும் Ile-de-France Mobilités (IDFM) நிறுவனம்.
‘நாங்கள் இது போன்று மின்னஞ்சல்களை அனுப்புவதில்லை’ என்று IDFM ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை நவிகோவிற்கு நீங்கள் பணம் செலுத்தாவிட்டால், மின்னஞ்சலுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின்னஞ்சலில் அவருடைய நவிகோ சந்தா பற்றியும், அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போதைக்கு, இது போன்ற போலி மின்னஞ்சல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.
நவிகோ பயனர்களுக்கு இந்த போலி மின்னஞ்சல் குறித்த முன்னெச்சரிக்கை மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது எத்தனை பேரை சென்றடைந்துள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும், ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருவழியாக, IDFM போக்குவரத்து சேவை நிறுவனம் இது குறித்து புகாரளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.