மெலுனில் (Melun, Seine-et-Marne) இரண்டு நாட்களில் இரண்டு வீடுகளில் கொள்ளையடித்ததாக 27 வயதான ஒரு பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்த கதவு உடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரண்டு கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி நடைபெற்றிருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். இரு கொள்ளை சம்பவங்களிலும் மடிக்கணினிகள், கணினித்திரைகள், வீடியோ கேம்கள் போன்றவை திருடப்பட்டிருந்தன. தாழ்ப்பாள்களும் ஒன்று போல உடைக்கப்பட்டிருந்தன. கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்தினர். அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் பக்கத்து வீட்டில் வசித்தவர் தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த இளம்பெண்ணை தான் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் இல்லாதது திருடுவதற்கு சாதகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். திருடப்பட்ட பொருட்களில் சில அந்த பெண்ணின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.