தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. 22 வயதான அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்குள் நுழைந்திருக்கிறார். மேலும், மூன்றாண்டுகளுக்கு முன்பே சட்ட சிக்கல்களால் பிரான்சை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவராவார். பாரிசின் அரசு வழக்குரைஞர் லார் பெக்கவு ‘அவர் லிபியாவை சேர்ந்தவர்’ என தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லை.
குற்றவாளியான நபர் தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் அவரை சுட்டு கைது செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாக்குதலாளிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. லிபியாவில் தற்போது நிலையற்ற சூழல் நிலவுவதால் அவரை நாடு கடத்த இயலாது என்று செய்தியறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்றாவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதற்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.