பெண் கத்தியால் குத்தி கொலை : கணவருக்கு தீவிர சிகிச்சை

by Editor
0 comment

வால்துவோசில் (Val-d’oise) பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருடைய கணவர் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

45 வயதான அப்பெண்மணி பல்வேறு கத்திக்குத்து காயங்களுடன் கொல்லப்பட்டு வீட்டில் கிடந்துள்ளார்.

அப்பெண்ணின் சகோதரர் அப்பெண்மணியை தொடர்பு கொண்டபோது அவரின் அழைப்புகளை யாரும் எடுக்காமல் போகவே, சந்தேகமடைந்த சகோதரர் உடனடியாக அவசர சேவையினரை தொடர்புகொண்டுள்ளார்.

அவசர சேவையினர் வந்து பார்த்தபோது பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சமையலறையில் அவருடைய 51 வயது கணவர் மயக்க நிலையில் கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே வீட்டிலிருந்த அவர்களுடைய இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தார்களா என்பது தெரியவில்லை எனவும், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் ஒன்றாக பல மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பிரான்சில் பெண் கொலையின் விகிதம் 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% உயர்ந்துள்ளது. 122 பெண்கள் தங்கள் கணவர்களால் அல்லது முன்னாள் கணவர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech