வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியிலிருந்து கிட்டத்தட்ட 4.8 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வண்டி நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர்களும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Villepinte-இல் மருந்தக ஊழியர் ஒருவருடைய வீட்டின் நிறுத்தப்பட்டிருந்த வண்டியிலிருந்து 2.5 டன் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வண்டி நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
‘தனக்கு தெரியாமல் தன்னுடைய சகோதரர் வண்டியை தன்னுடைய வீட்டில் நிறுத்தியுள்ளார். இது எனக்கு தேவையில்லாத கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, எங்கள் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது, அவர் இப்படி செய்வார் என எதிர்ப்பார்க்கவில்லை’ என பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியின் சகோதரியான அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
‘நான் வீட்டுக்கு வெளிப்புறம் வண்ணம் அடித்துக்கொண்டிருந்தபோது அவர் (குற்றவாளி) தன்னுடைய வண்டியை வீட்டு தோட்டத்தில் 24 மணி நேரத்திற்கு மட்டும் விட்டு செல்வதாக தெரிவித்தார். மனைவியின் தம்பி என்பதால் நானும் சம்மதித்தேன். அவர் அதற்கு பணம் அளிப்பதாக கூறினார். ஆனால் வண்டியை நிறுத்திக்கொள்வது என்னை பொறுத்தவரை என்னால் முடிந்த சேவை என்பதால் அதை அன்போடு மறுத்துவிட்டேன். எனக்கு அதில் ஏதும் சிக்கல் இருந்ததாக அப்போது தெரியவில்லை’ என்று அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய சகோதரர் ஏற்கனவே ஜனவரி 2020-ஆம் ஆண்டு கஞ்சா பிசினை மொரோக்காவிலிருந்து இறக்குமதி செய்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 14-ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிகிறது.