பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தடுத்து வைத்து விசாரணை
லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மதுசார போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு இலங்கையர்களையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுபான கடத்தல்
தமிழ் குழுவொன்றினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில் இவர்கள் இந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தகவல்: IBCTAMIL.COM