சியரான் சூறாவளியினால் இதுவரை இருவர் பலியாகியுள்ளனர். ஐம்பது பேர் காயமடைந்துள்ளதோடு கடுமையான பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமையன்று பிரான்சின் வட மேற்கு கடற்கரையோர பகுதிகளில் வீசிய சியரான் புயலால், பிரெத்தென் (Breton) சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு, கன மழையும் பொழிந்தது.
புயலினால் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது வரை இருவர் பலியாகியுள்ளனர். ஐம்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
புயல் கரையை கடந்தாலும் இன்னும் மூன்று மாவட்டங்கள் கண்காணிப்பில் உள்ளன.
இரவு முழுவதும் பிரெத்தெனில் பெய்த கடும் காற்றும், கன மழையும் பிற்பகலில் நார்மண்டியையும், அடுத்த நாள் Hauts-de-france பகுதிகளையும் தாக்கின.
இதனால் பல இடங்களில் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
🛰️ Animation satellite de la 🌀#tempête #Ciaran ces 36 dernières heures, depuis sa formation sur l'Atlantique hier, son passage sur le bassin de la Manche aujourd'hui et son éloignement vers la mer du Nord ce soir. pic.twitter.com/7WXbUKMnyz
— La Chaîne Météo (@lachainemeteo) November 2, 2023
புயலால் பொது போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில வழித்தடங்களில் தடங்கள் ஏற்படும் என SNCF அறிவித்திருந்தது.
சியரான் (Ciaran) புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்பில் இருவர் பலியாகியுள்ளனர், பதினாறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6,84,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரத்தென் பகுதியில் 1987-ஆம் ஆண்டு வீசிய சூறாவளிக்கு பிறகு சியரான் புயலினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.