BBC நிறுவனத்தில் நடப்பது என்ன..? நடந்தது ரெய்டா, சர்வேயா?

by Editor
0 comment

ஜிஎஸ்டி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதானி வில்மார் நிறுவனத்தின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அலுவலகம் மற்றும் குடோன்களில் நள்ளிரவில் ஆய்வுகளை மேற்கொண்டனர். முதலில் இந்த ஆய்வு ரெய்டு எனச் செய்திகள் வந்த நிலையில் அடுத்த நாள் அதானி குழுமம் இது ரெய்டு அல்லது வழக்கமாகச் செய்யப்படும் ஆய்வு என அறிக்கை வெளியிட்டுச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதானி குழுமத்தின் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் செய்த ஆய்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களிலேயே வருமான வரி துறையினர் பிபிசி செய்தி நிறுவனத்தில் செய்த ஆய்வு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதில் மிகவும் முக்கியமானது வருமான வரி துறையின் சர்வே என்றால் என்ன.. ? Adani குழுமத்தின் இழப்பு India-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ?

வருமான வரித் துறை:
பிப்ரவரி 14, 2023 அன்று, வருமான வரித் துறை, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி இந்தியாவின் வளாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வை பிபிசி பரிமாற்ற விலை விதிகளுக்கு இணங்காதது, சர்வதேச வரிக் கடமைகள் மற்றும் அதன் பரந்த லாப திசைதிருப்பல் ஆகிய சந்தேகங்களின் கீழ் செய்யப்பட்டதாகப் பிஜேபி செய்தி தொடர்பாளரும், பொருளாதார வல்லுனருமான சஞ்சு வர்மா தெரிவித்துள்ளார்.

பிபிசி அலுவலகங்கள்:
ஆனால் சர்வதேச ஊடகமான பிபிசி-ன் டெல்லி, மும்பை அலுவலகங்களில் செய்யப்படும் ஆய்வு குறித்துப் பிபிசி-யோ, வருமான வரி துறையோ எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்டு கிடையாது, சர்வே மட்டுமே:
வருமான வரி சட்டத்தின் கீழ் வருமான வரி துறையின் இந்த நடவடிக்கை ரெய்டு கிடையாது, சர்வே மட்டுமே என அறியப்படுகிறது. இத்தகைய சர்வே வருமான வரி துறையால் வழக்கமாகச் செய்யப்படுவது இதைச் சர்ச் அல்லது ரெய்டு உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?

ஆவணங்கள்:
வருமான வரிச் சட்டம் 1961 கீழ் பிரிவு 132, 133A கீழ் வருமான வரித் துறை ஒரு நிறுவனத்தை ஆய்வு செய்யும் போது வரி விதிகள் மீறல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து ஆவணங்களைக் கைப்பற்றினால் சர்ச் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் உண்டு. ஆனால் இதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை.

ஐடி சர்வே-ல் உள்ள கட்டுப்பாடுகள் இதேபோல் சர்வே என்பது ஒரு நிறுவனம் இயங்கும் போது அதாவது பணி நேரத்தில் தான் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வுக்காகச் செல்ல வேண்டும், அந்த வகையில் வருமான வரி துறையினர் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிபிசி அலுவலகத்தில் ஆய்வு செய்யச் சென்றனர். இதேபோல் சர்வே மேற்கொள்ள நிறுவனத்தின் உதவிகள் உடன் தான் செய்ய முடியும்.

ரெய்டு வித்தியாசம்:
ஆனால் ரெய்டு என்றால் சூரியன் உதித்த பின்பு செல்ல வருமான வரி துறைக்கு அதிகாரம் உண்டு, இதேபோல் ரெய்டு என்பது வரி ஏய்ப்பு அல்லது கறுப்புப் பணம் குவிப்பு பற்றிய தகவல்களை வங்கிகள், நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் சிபிஐ போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரித் துறை தொடர்ச்சியாகப் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் செய்யப்படுவது.இதேபோல் ஒரு நிறுவனத்தின் ரெய்டு நடத்த வேண்டும் என்றால் வருமான வரித் துறை யாருடைய உதவியும் இல்லாமல் ஆய்வு செய்ய முடியும்.

குஜராத் சம்பவம்:
கடந்த 2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்பு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய வரலாற்றில் சோகமாகப் பக்கங்களில் ஒன்றாக உள்ளது. இதில் மோசமான சம்பவத்தில் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

குஜராத் ஆவணப்படம்:
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் 2002 குஜராத் கலவரம் தொடர்பாகப் பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து 2 பகுதிகளாக வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் சர்ச்சையானது.

சந்தேகத்தின் பெயரில் ஆய்வு:
இந்த நிலையில் தான் பிபிசி நிறுவனத்தின் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு சந்தேகத்தின் பெயரிலேயே துவங்கப்பட்டாலும், வரி விதிகள் மீறல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து ஆவணங்களைக் கைப்பற்றினால் சோதனையாக மாறலாம்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech