Thursday, April 30, 2026

Haute-Savoie : பெண்ணிடம் பாலியல் வன்முறை – ஒருவருக்கு சிறை

by Editor
0 comments

உறவுப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அறுபது வயது நபருக்கு ஆன்சி (Annecy) நீதிமன்றம் (Haute-Savoie) திங்கள்கிழமை தண்டனை விதித்தது.

இச்சம்பவங்கள் 1997 மற்றும் 1999 க்கு இடையில் Rumilly-யிலும், 2005 மற்றும் 2006 க்கு இடையில் Vaulx-லும் நிகழ்ந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு சகோதரிகள். அவர்களுக்கு அந்த துன்புறுத்தல்கள் தற்போது சரிவர நினைவில் இல்லை என்று கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும், சான்றுகளின் அடிப்படையில் 60 வயதான அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்ள அவர் தடைசெய்யப்பட்டுள்ளார், மேலும், நீதித்துறையின் பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கோப்பில் அவரது பெயர் உள்ளிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech