கடந்த மாதம் பாரிசில வெடி விபத்து ஏற்பட்டு சேதமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர் அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர்.
பாரிசிலுள்ள செயின்ட்-ஜாக் (rue Saint-Jacques) வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கடந்த மாதம் வெடி விபத்து ஏற்பட்டது. திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியதில், அக்கட்டிடம் சேதமடைந்தது.
இதனையடுத்து கட்டிடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். வெடி விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், கட்டிடம் இருந்த தெருவின் வெவ்வேறு வீடுகளில் இருந்து கிட்டத்தட்ட 30 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்டன.
அவற்றில் பல மாதிரிகளில் குறிப்பாக வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் லெட் (lead) எனப்படும் ஈயத்தின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக தென்பட்டன.
அத்துடன் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறார் பள்ளிகள் மற்றும் காது கேளாதோர் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின்படி, குறிப்பிட்ட அளவை விட ஈயம் அதிகமாக சேர்ந்ததாலேயே இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் இருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஈயத்தால் விளையும் மற்ற கேடுகள்
ஈயத்தின் நச்சுத்தன்மை 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் மிகவும் ஆபத்தானது. இத நட்சத்திரத்தன்மை நரம்பு மண்டலத்தையும், எலும்பு மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
வீட்டில் ஈயம் அதிக அளவு சேர்வதை தடுக்க வீட்டை அடிக்கடி ஈரத்துணியால் துடைக்க வேண்டும். காலணிகள், குழந்தைகளின் தள்ளுவண்டிகள், வண்டிகள் ஆகியவற்றை வீட்டிற்குள் வைக்கக்கூடாது. நகங்களை நன்கு வெட்டுவதுடன், கைகளையும் அடிக்கடி கழுவ வேண்டும். அத்துடன் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களையும் துடைக்க வேண்டும்.