ஜூலை 14 : ஈபிள் கோபுரத்தின் வாணவேடிக்கைகளை எங்கெங்கு காணலாம்…

by Editor
0 comment

பிரான்சின் தேசிய தினமான ஜூலை 14 அன்று இரவு பதினொரு மணியளவில் நடைபெறும் வாண வேடிக்கைகள் பலருக்கு பிடித்தமான ஒன்று.

வீட்டின் மேற்கூரைகள், சேய்ன் ஆற்றின் கரையோரம், பூங்காக்கள் போன்ற பட இடங்களிலிருந்தும் இந்த வாண வேடிக்கைகளை பார்க்கலாம்.

ஜூலை 14 அன்று மாலை வேளையில் ஈபிள் கோபுரத்தை காணச்செல்வது அருமையான உணர்வைத் தரும்.

அற்புதமான வாணவேடிக்கைகளை கண்டு இரசிக்க ஏதுவான இடங்கள் சிலவற்றைக் காண்போம்….

திறந்த வெளியில் காண…

Parc de Belleville (பாரிஸ் 20)

இந்த இடம் ஈபிள் கோபுரத்திலிருந்து தொலைவாக இருந்தாலும் பாரிசின் அருமையான காட்சியைத் தரும்.

பாரிசின் புகழ்பெற்ற இடங்களுள் ஒன்றான சேக்ரி கேர் (Sacré-Coeur) படிக்கட்டுகளில் இருந்தும் நீங்கள் வாணவேடிக்கைகளை காணலாம்.

ஈபிள் கோபுரத்தின் அருகிலிருந்து நீங்கள் காண விரும்பினால் Caulaincourt bridge எனும் பழமையான பாலத்திற்கு செல்லலாம்.

சேய்ன் ஆற்றின் கரையோரங்களில் அமர்ந்து வாணவேடிக்கைகளை இரசிப்பதும் உங்களுக்கு பரவசத்தை தரும்.

திறந்தவெளியில் வாணவேடிக்கைகளை காணக்கூடிய மற்ற இடங்கள் :

  • Bridge of Iéna
  • Bridge of Grenelle
  • Bridge of Arts
  • Concorde bridge
  • Alexandre III bridge
  • Place de la Catalunya

பாரிசின் தேசிய நாள் வாணவேடிக்கைகள் ஈபிள் டவரில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியிலிருந்து 11:35 மணி வரை நடைபெறும்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech