பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பிரான்சின் தேசிய நாளான ‘பஸ்தி நாள்’ விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு வருகை தந்துள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன் பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாரிசில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ற மோடிக்கு திரளாக குழுமியிருந்த பிரான்ஸ் வாழ் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
அதனையடுத்து, எலிசி அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அதிபர் மெக்ரான் மற்றும் அவரது மனைவி வரவேற்பளித்தனர். அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. பின்னர், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ வழங்கி பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த விருதினை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
French President Emmanuel Macron bestowed the Grand Cross of the Legion of Honor on PM Narendra Modi. It is the highest French honour in military or civilian orders. PM Modi will become the first Indian PM to receive this honour.
— ANI (@ANI) July 13, 2023
In the past, the Grand Cross of the Legion of… pic.twitter.com/7nBEcAeDf8
இன்று நடக்க உள்ள பிரான்சின் தேசிய நாளில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோனுடன் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.