Pierre Palmade விபத்து : விசாரணையில் திருப்புமுனைகள்

by Editor
0 comment

பியரி பால்மேட் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலன் தேறி வருகிறார் என்றும், என்ன நடந்தது என்பதை உணர்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்ட 54 வயதான நகைச்சுவை நடிகர், தனது சகோதரி ஹெலேன் மூலம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், அவர் ஏற்படுத்திய சாலை விபத்திற்குப் பிறகு தனது செயலுக்காக “வெட்கப்படுவதாக” தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வில்லியர்ஸ்-என்-பியரில் (சீன்-எட்-மார்னே) நடைபெற்ற விபத்தில் அவர் உட்பட நான்கு பேர் கடுமையாக காயமடைந்தனர்.

பியரி பால்மேட்டின் உடல்நிலை தற்போதைக்கு நீண்ட விசாரணைகளுக்கு ஒத்துழைக்காது என்றும், அந்த நடிகரை காவல்துறை விசாரிக்க விரும்புவதால் மருத்துவர்களின் ஒப்புதலுக்காக மெலுனின் நீதித்துறை காத்திருக்கிறது. எனவே அவர் 48 மணி நேர கண்காணிப்பில் இருக்கிறார்.

அதன்பிறகு அவர் gendarmes எனப்படும் காவல்துறையினரால் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

விபத்தின் போது காரிலிருந்து தப்பியோடிய அவருடன் பயணித்த அந்த இரண்டு பேர் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த விபத்துக்கும் என்ன தொடர்பு என்பதை அறிய காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விபத்தின் போது தானும் அந்நடிகருடன் காரில் பயணித்ததாக 47 வயதான நபரொருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அவரை விசாரித்தபோது அவர் போதையிலிருப்பதும், அவர் சொன்னது பொய் என்பதும் தெரியவந்துள்ளது. பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவருடைய இன்னொரு வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. அதிகாலை 1:30 மணியளவில் அந்த வீட்டின் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அவ்வீட்டிலிருந்து எதுவும் களவுப்போகவில்லை என்று கூறப்பட்டாலும் வீட்டிற்குள் நுழைந்தது யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech