உலகின் மிக வயதான நபர் காலமானார்!

by Editor
0 comment

உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு அருட்சகோதரி ஆந்திரே, தனது 118வது வயதில் பிரான்சின் துலோன் (Toulon) நகரில் காலமானார்.

லூசில் ரேண்டன் என்ற இயற்பெயர் கொண்ட அருட்சகோதரி ஆந்திரே, 1904ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள அலே எனும் ஊரில் பிறந்தவர்.இளம் வயதில் ஆசிரியையாகவும், பின்பு இரண்டாம் உலகப்போரின் போது தனி பயிற்றாசிரியராகவும் பணியாற்றினார்.

உலகப்போர் முடிவுற்றதும் ஆதரவற்றவர்களுக்காகவும் முதியவர்களுக்காகவும் விச்சி (Vichy) எனும் ஊரிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றினார். 1944ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறிஸ்தவ அறக்கட்டளையில் சேர்ந்து கத்தோலிக்கராக மாறி ஆந்திரே என்ற பெயரைப் பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை பராமரிப்பதில் செலவிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தனது 118வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை பெற்றிருந்தார். முதுமையியல் ஆய்வுக் குழுமத்தின் (GRG) உலகின் சிறந்த நூறு வயதைக் கடந்தவர்கள் தரவரிசைப் பட்டியலின் படி, அருட்சகோதரி ஆந்துரே உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்டார். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிக வயதானவராக மட்டுமல்லாமல் உலகில் மிக வயதான அருட்சகோதரி என்ற சாதனையையும் உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெல்லா பிரான்சின் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவர் காலமானதாக தெரிவித்தார். மேலும், “இது பெரும் சோகத்தை அளித்துள்ளது. ஆனால் இதை கன்னியாஸ்திரி ஆண்ட்ரே விரும்பினார். தனது அன்பான சகோதரனுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசை. அவரைப் பொறுத்தவரை, இது அவருக்கு கிடைத்த சுதந்திரம்” என்று தெரிவித்தார்.

கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானதை அடுத்து, அமெரிக்காவில் பிறந்த ஸ்பானிஷ் சூப்பர் சென்டெனரியரான 115 வயதாகும் மரியா பிரனியாஸ் மோரேரா உலகின் மிக வயதான நபராகியுள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech