பிரான்சில் இன்று காலை Yvelines-இல் உள்ள Rambouillet-இல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை 7:30 மணியளவில் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்த தீ விபத்தில் அக்குடியிருப்பில் வசித்து வந்த 48 வயதான பெண்மணியும், அவரது 18 வயது மகனும், 8 வயது மகளும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பல்கேரியாவை சேர்ந்த அந்த பெண் அவருடைய இணையர் மற்றும் பிள்ளைகளுடன் அங்கு குடியிருந்ததாகவும், 2020-ஆம் ஆண்டு முதல் அவருடைய இணையரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், இணையருடைய பெயரில் இருந்த அவ்வீட்டை விட்டு அப்பெண் வெளியேற மறுத்து சண்டையிட்டு வந்ததாகவும், உள்ளூர் நீதிமன்றத்தில் அப்பெண்ணின் இணையர் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் 17 ஜனவரி 2023 அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது.