தனது வீட்டில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஒரு முதியவர் மீது எங்கிருந்தோ வந்த தோட்டா பாய்ந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.
மாலை, 5:30 மணியளவில் தன்னுட்டைய வீட்டு தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த அந்த முதியவரின் முதுகில் தோட்டோ ஒன்று பாய்ந்துள்ளது. அவசர சேவைகளின் உதவியுடன் காயத்துடன் அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவல்துறை விசாரணையில் அவர் மீது பாய்ந்தது 9 மி.மீ. தோட்டா என்று தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் அந்த தோட்டா எங்கிருந்து வந்தது என்று தொடர்ந்து புலனாய்வு செய்து வருகின்றனர். அந்த தோட்டா வெகு தூரத்திலிருந்து வந்து அவர் மீது பாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காயமடைந்த அந்த 60 வயது முதியவர் தீவிர சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காவல்துறையினர் ‘கொலை முயற்சி வழக்கு’ பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.