Carpentras : துப்புரவு பணியிலிருந்த ஊழியர் மீது தாக்குதல்

by Editorial Team
0 comment

துப்புரவு பணியிலிருந்த ஊழியர் ஒருவர் சுத்தியலால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் Carpentras இன் pous du plan நகரில் நடைபெற்றுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே குற்ற வழக்குகள் கொண்ட ஒருவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23, திங்களன்று அதிகாலை 1 மணியளவில் Pous du plan நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாக்கப்பட்ட இளைஞர் தன்னுடைய சக தொழிலாளர்களுடன் துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தேவையின்றி வலுக்கட்டாயமாக தூண்டப்பட்ட ஒரு வன்முறை சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தும் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.

உறுதி செய்யப்பட்ட செய்திகளின்படி இவ்வழக்கு தொடர்பாக தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனது சக தொழிலாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார்

அவர்களுக்கு துப்புரவு பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த தெரு போதைக் கடத்தலுக்கு பெயர் போன ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. பணியிலிருந்த அந்த இளைஞர் முன் அவ்வழியாக வந்த ஒரு சிறுவன் சிறிதளவு குப்பையை அவர் முன் வீசி எறிந்து அதை எடுக்குமாறு அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் தனது பணியை தொடர்ந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த பதிமூன்று வயது சிறுவன் இன்னும் பலரை சேர்த்துக்கொண்டு அங்கு வந்துள்ளார். அப்போது அந்த கும்பலிலிருந்த ஒருவர் தன்னுடைய சட்டையில் மறைத்து வைத்து இருந்த சுத்தியலைக் கொண்டு அந்த இளைஞரை கடுமையாகத் தாக்கியுள்ளார். அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் Carpentra-இல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக Avignon மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் வீட்டை சோதனையிட்ட போது கஞ்சாவும், 2000 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டன

அவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள்கள் pous du plans நகருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுவன் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிபதியால் பின்னர் விசாரிக்கப்படுவான் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் தற்போது மீண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech